குப்புசாமியின் கவலையெல்லாம், முன்புபோல தனது ஆணுறுப்பு விறைப்பதில்லை என்பதாக இருந்தது.
அதனால்தான் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என சலித்துக் கொண்டார். விறைப்புத் தன்மைக்காக மருத்துவரை அணுகலாமா? இல்லை வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? இந்தக் குழப்பம் அவரைப் பீடித்திருந்தது.
தக்க ஆலோசனை வேண்டி சக வயது நண்பர் ஒருவரிடம் இது பற்றிக் கேட்டார். அந்த நண்பரோ ‘உனக்கு இன்னும் ஆசை அடங்கலையா?
அடிக்கடி செக்ஸு ல ஈடுபட்டா உடம்பு ஒண்ணுமில்லாமல் போகும். படுத்த படுக்கை ஆயிடுவே… குடும்பம், குழந்தைங்கன்னு இருக்கிறதை வெச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்கிற வழியப்பாரு’ என்று பேசி அவரை உதாசீனப்படுத்தினார்.
குப்புசாமிக்கு எழுந்த கேள்வியும் அவரது நண்பரின் உதாசீனமும் இன்றைக்கு ஒட்டுமொத்த சமூகத்தின் மன வெளிப்பாடாகத்தான் இருக்கிறது.
செக்ஸில் அடிக்கடி ஈடுபட்டால் உடம்பு சரியில்லாமல் போகும். நோய்கள் பீடிக்கும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.
இது உண்மையா? மூளை, இதயம், ஹார்மோன்கள், ரத்த ஓட்டம் ஆகிய நான்கும்தான் செக்ஸ் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருப்பவை. இந்த உறுப்புகள் செய்யும் ரசாயன மாற்றங்களால்தான் செக்ஸ் ஆர்வம், விறைப்புத்தன்மை ஆகியவை ஏற்படுகின்றன.
இந்த உறுப்புகளை சீராக வைத்திருக்க வேண்டும். இப்போது மருத்துவத்துறை அதிநவீன வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.
செக்ஸ் பிரச்னைகளை தீர்ப்பதற்கு வயாக்ரா, புரோஸ்டாகிளான்டின், ஸ்டெம்செல் தெரபி, SSRI, Flibanserin ஆகிய மருத்துவ முறைகள் வந்திருக்கின்றன.
இவற்றைப் பயன்படுத்தி செக்ஸில் ஈடுபடலாம். எல்லாவற்றையும் விட கடைசி நம்பிக்கையாக Penile implant surgery என்னும் பிரம்மாஸ்திரம் வந்திருக்கிறது.
இப்படியாக மருத்துவத் தீர்வுகள் நிறைந்திருக்கும்போது செக்ஸில் ஈடுபடமுடியவில்லையே என கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
மருத்துவ ரீதியாகப் பார்க்கும்போது, உறவு கொள்ளும் போது உடல் ரீதியாக நிறைய பயன்களை
அடைய முடியும் என்பதுதான் உண்மை.
செக்ஸ் என்பது இதயத்தை நன்கு துடிக்க வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிறந்த உடற்பயிற்சி.
ஏரோபிக் உடற்பயிற்சிக்கு இணையானது செக்ஸ் உறவு.
ஒவ்வொரு முறையும் செக்ஸில் ஈடுபடும்போது 200 கலோரி எரிக்கப்படுகிறது. இது ட்ரெட்மில்லில் 15 நிமிடம் ஓடுவதாலும், மைதானத்தில் 30 நிமிடம் ஓடுவதாலும் கிடைக்கும் பயனுக்கு இணையானது.
உச்சநிலையை அடையும்போது எண்டார்பின்ஸ் (Endorphins) ஹார்மோன் சுரக்கிறது.
இது மனமகிழ்ச்சி மற்றும் திருப்தி உணர்வை அளிக்கும். இதனால் உடல்வலி மற்றும் மூட்டுவலி ஏற்படாது.
மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணத்தையும் குறைக்கிறது.
இந்த ஹார்மோன் அடிக்கடி சுரந்து கொண்டிருந்தால் நமது வாழ்நாள் நீட்டிக்கும். ஆண்களுக்கு மட்டுமல்ல… பெண்களுக்கும் இந்த ஹார்மோன் பயனளிக்கிறது.
சமீபத்திய ஆராய்ச்சியின்படி தகுந்த இடைவேளையில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பகத்தில் கட்டியிருந்தால் கூட, அக்கட்டி புற்றுநோயாக மாறாமல் இருப்பதாக தெரிவிக்கிறது.
பெண்களுக்கும் செக்ஸ் உச்சநிலையின் போது எண்டார்பின்ஸ், ஆக்சிடோஸின், DHEA ஆகிய ஹார்மோன்கள் சுரந்து, உடல் மற்றும் மனதுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
மூளை, மூட்டு மற்றும் ஜனன உறுப்பு ஆகிய மூன்றும் நலமாக இருக்கும் போதே சலிக்கும் வரை செக்ஸில் ஈடுபட்டு விட வேண்டும். இல்லையென்றால் இழப்பு உங்களுக்குத்தான்.
அடிக்கடி செக்ஸில் ஈடுபடுவதன் மூலம் நல்ல உடல்நலத்தையும், மகிழ்ச்சியான மன நலத்தையும் பெறலாம். செக்ஸ் உடலையும் மனதையும் உற்சாகப்படுத்தும் ஒரு டானிக்!
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி
Subscribe to:
Post Comments (Atom)
Latest
அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?
தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular
-
பிரணிதா சகுனி மூலம் அறிமுகமான நடிகை பிரணிதா பெங்களூருவில் ஓர் நட்சத்திர ஹோட்டலில் பங்குதாரராக உள்ளார். விரைவில், இதன் கிளைகள் மற்ற முன...
No comments:
Post a Comment