நோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு. எப்போதும் டி.வி.யில் கரீனா கபூர், கேத்ரீனா கைப் என இந்தி நடிகைகள் பாடி ஆடுவதைத்தான் விரும்பிப் பார்ப்பார்.
இவங்களை எல்லாம் பாருடி… எப்படி கச்சிதமா உடை போட்டுக்கிட்டு கிளாமரா இருக்காங்க! பார்த்தவுடனே மூட் வருது! நீ எப்ப பார்த்தாலும் ஒரே நைட்டி, அழுமூஞ்சி மாதிரி உம்னு இருந்தா எப்படி மனுஷனுக்கு மூடு வரும்’ என மனைவி ஜெனிபரிடம் வம்பு இழுப்பார்.
அதுக்கு பதில் சொல்லும் விதமாக ஜெனிபரும் தனது அர்ச்சனையை ஆரம்பிப்பார்… இவர் பெரிய அமீர்கான்… இவரைப் பார்த்தவுடன் எனக்கு ரொமான்ஸ் வந்திரும்.
கர்லா கட்டைக்கு கைகால் முளைச்ச மாதிரி கரு கருன்னு இருந்துகிட்டு உனக்கு கரீனா கபூர்
கேட்குதா? அப்படியே பெட்ரூமுக்கு வந்திட்டா மட்டும்… எனக்கு நல்ல மூடு வர்றப்ப உங்களுக்கு சுத்தமா இறங்கிரும்’ என பதில் சொல்ல வீடு ஏக ரணகளமாகும். இவர்கள் மட்டுமல்ல… பல படுக்கையறைகளில் இப்படித்தான் இருக்கிறது. இந்தப் பிரச்னை ஏன்?
ஆண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும், பெண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உடலளவிலும் மன அளவிலும் கூட மாறுபாடுகள் உண்டு. ஆண்களுக்கு செக்ஸ் தூண்டுதல் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி உடனடியாக வந்துவிடும்.
பெண்களுக்கு தம் பிரியாணி போல செக்ஸ் உணர்ச்சி வருவதற்கு நேரமாகும். வந்தால் நீடித்த நேரம் இருக்கும். உணர்ச்சி வசப்
படுவதிலும் வித்தியாசம் இருக்கிறது. உலக அளவில் நடந்த ஆராய்ச்சியில் ஆண்கள் விரைவில் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.
அதிக பட்சம் 30 நொடிகளில் தயாராகிவிடுகிறார்கள். பெண்களுக்கு செக்ஸ் உணர்வு ஏற்படுவதற்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடம் தேவை.
ஒரு மாட்டு வண்டி நகர வேண்டும் என்றால் இரு மாடுகளும் இழுக்க வேண்டும். ஒரு மாடு சரியாக இழுக்கவில்லை எனில் வண்டி நகராது. அது போலத்தான் செக்ஸ் உணர்வும்.
இருவரும் சரியாக இயங்கினால்தான் செக்ஸ் வாழ்க்கை சுகமாக அமையும்.மனைவியை தயார்படுத்த கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும்.
ஃபோர் பிளே எனப்படும் உடலுறவுக்கு முந்தைய தூண்டுதல் முக்கியம். முத்தம், லேசான தடவுதல் போன்ற இதமான செயல்களை செய்து பேசிக் கொண்டிருக்க வேண்டும்.
மனைவிக்குப் பிடித்த விஷயங்களை மட்டும் பேச வேண்டும். எந்த நேரத்தில் எதை பேச வேண்டும் என்ற தெளிவும் இருக்க வேண்டும். பிடிக்காத விஷயங்களை பேசினால் மனைவியின் மனநிலை மாறி அன்று செக்ஸ் நடக்காமல் போக வாய்ப்புண்டு.
ஆண்கள் ஓர் உணர்வில் இருந்து அடுத்த உணர்வுக்கு எளிதாக மாறிவிடுவார்கள். பெண்களின் உணர்வுநிலையை மாற்றுவது கடினம்.
அன்று அவர்கள் வருத்தப்படும்படி நடந்து கொண்டால் நாள் முழுவதும் அவர்களின் மனதில் அந்த வருத்தமானது இருக்கும்.
காலையில் மனைவியை திட்டிவிட்டு, இரவில் ‘படுக்கைக்கு வா’ என்றால் காரியம் நடக்குமா?
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
ஜனன உறுப்பைக் கொண்டு செய்வது மட்டும் செக்ஸ் என நினைத்திருப்பவர்கள் அதிகம். செக்ஸுக்கு முன்னும் பின்னும் பல விஷயங்களும் மனநிலைகளும் உண்டு. எல்லாம் சேர்ந்ததுதான் மன்மதக்கலை.
மற்றவர்களுக்குத் தெரியாமலே மனநிலையை அறிந்து கொள்ள தம்பதி இருவரும் செக்ஸ் சிக்னல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனைவி விருப்பத்தில் உள்ளாரா? இல்லையா? இதைத் தெரிந்துகொள்ள சிக்னல்கள் உதவும்.
மனைவிக்கு சில நேரம் செக்சில் விருப்பம் இல்லையெனில், புரிந்து கொண்டு தள்ளி இருப்பது நல்லது. கட்டாயப்படுத்தி உறவு கொள்ள நினைக்கக் கூடாது.
தம்பதி இடையே தகவல் பரிமாற்றம் எளிதாகவும் சுமுகமாகவும் இருந்தால் தாம்பத்திய வாழ்க்கையை எந்தப் பிரச்னையும் இன்றி சுகமாக அனுபவிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Latest
அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?
தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular
-
பெற்ற மகளிடம் 600 முறை, முறை தவறி நடந்த ஒரு காம அரக்கன் பற்றிய செய்தி மலேசிய மக்களை மட்டுமின்றி உலகையே உலுக்கும் வகையில் உள்ளது. 36 வய...
-
பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி வி...
-
இங்கு உலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பழக்கவ...
-
பெரும்பாலும் பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். அல்லது நீங்கள் திரைப்படங்களில் கண்கூட பார்த்திருக்கலாம். முத்தமிட்டுக் கொள்ளும் ப...
-
எத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும்,ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்...
-
என்னதான் நெருக்கமான தோழியாக இருந்தாலும் கல்யாணம் ஆகிவிட்டால் கொஞ்சம் தள்ளியே வைப்பது தான் நல்லது. இல்லையேல் நிறைய தவறுகள் நடந்து விடும்....
-
ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளுக்கு இடையே உள்ளது.இத்தனை முறைதான் என்று திட்டவட்டமாக கூற ம...
No comments:
Post a Comment